செயலே அன்பு – Love is in Action
சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்வதில் இரு தரப்பினர் உண்டு. முதலாமவர் தான் படித்த, உணர்ந்த நல்ல விஷயங்களை பகிர்வர். எப்போதாவது சமூகத்தின் மீதுள்ள தனது அக்கறையை, கோபத்தை, முரணை வெளிபடுத்தவும் செய்வர். அதற்காக எந்த தனிநபர் தாக்குதலை விடுத்து, சிலரது தவறான கொள்கைகளை விமர்சிப்பர்.
இரண்டாமவர் யாரோ தயாரித்த மீம்ஸ் போன்றவற்றை பகிர்வர். இவ்வாறு பகிர்வது தவறே இல்லை. அதே சமயம் இந்த பதிவு தேவைதானா, இது முழுக்க உண்மையானதா என கூட பாராமல் அப்படியே பகிர்தலும், அடிக்கடி தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்ட பகிர்வது தனது நேரத்தையும், தன்னையும் கொல்வதற்கு சமம். யார் மீது நாம் கொண்டுள்ள வன்மமும் நம்மையே அழிக்கும்.
சரி நீங்க யார்? உங்க துறை என்ன ?
ஒரு வேளை முழு நேர அரசியல்ல இருந்தா கூட பரவாயில்ல ஓட்டு போட மட்டுமே அரசியல் தேவைப்படும் போது அப்போது காட்டலாமே தனது ஆதரவை. அதை விடுத்து அர்த்தமற்று, தினந்தோறும், நொடிதோறும் ஒரு தனிநபரையோ, கட்சியையோ விமர்சிப்பது மேலும் பல விமர்சனங்களையும், எதிரிகளையுமே தரும் .
சமூக அக்கறை என்பது தனக்கு பிடிக்காத அரசியல்வாதிகளை பற்றிய மீம்ஸ்களை தினமும் பகிர்வதோ….தனக்கு பிடிக்காத அரசியல் கட்சிகளை பற்றிய மீம்ஸ்களையோ தினமும் பகிர்வதல்ல…எந்த விஷயம் உளமாற தன்னை பாதிக்கிறதோ அதற்காக முடிந்தால் தன்னை செயலாக அர்ப்பணித்தலே ஆகும்..
உதாரணமாக பிறர் பசியோடு வாழ்வது தாங்க இயலவில்லை எனில் அதை பற்றிய பகிர்வோ, மீம்ஸோ உதவ போவதில்லை. தன்னால் முடிந்த போது ஒரு பசியுள்ளவர்க்கு உணவளிக்கலாம். அன்பை வார்த்தைகளில் காட்டுபவர்களை விட, அன்பை செயலில் காட்டுபவர்களை அதிகம் நேசிக்கிறேன் என்ற எனது குருவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.
அருணாச்சலசிவ
Dr.Balasandhya SL Kumaaran
Chennai.