அன்பின் வழியது உயிர்நிலை
யுத்த பூமி.
இரண்டு சின்ன குழந்தைகள்.
ஒன்று முதல் மூன்று வயதுக்குள் இருக்கும்….
மீட்டு எடுக்கப்பட்ட அந்த குழந்தைகள்,பரந்த அந்த கூடாரத்தில் நல்ல சில்லிடும் தரையில் அமர்த்தி உள்ளார்கள்.
அழுது ஓய்ந்த ஒரு குழந்தை,
புதிதாக வந்திருங்கிய மற்றொரு குழந்தையை பார்க்கிறது.
கட்டுகடங்காத கண்ணீருடன் அது அமர்ந்து, ஏற்கனவே உள்ள குழந்தையை பார்க்கிறது….
அழுது அழுது கண்ணீர் வறண்ட இந்த குழந்தை அந்த குழந்தையுடன் பேசினால் எப்படி இருக்கும் என ஒரு கற்பனை..
என்ன குண்டு விழுந்து உங்க அப்பா, அம்மா செத்திட்டாங்களா
உன்னைய காப்பாத்தி கொண்டு வந்தாங்களா
ஆமாம் என அழுத முகத்தோடு சொல்ல ,உனக்கு என்ன ஆச்சு என கேட்க….
எங்க வீட்ல எல்லாருமா உட்கார்ந்து பேசி சிரிச்சு சாப்பிட்டு இருந்தோம் சாப்பாடு கொஞ்சமா தான் கிடைச்சது அம்மா உருட்டி கையில போட்டாங்க, திடீரென குண்டு சத்தம்
அப்புறம் என்ன நடந்தது தெரியாது….
நா இங்க இருக்கேன்
குண்டு வெடிச்சு எங்க குடும்பத்தில எல்லாரும் இறந்துட்டதா சொன்னாங்க.
உனக்கு அழுகை வரலையா?
வரல, அழுகை தீர்ந்ததது
7 நாள் ஆச்சு.
அழுது ஓஞ்சு போயிட்டேன்…
ஐயோ ஏன் இப்படி நடக்குது
நான் பெரியவனா ஆகி
சந்தோஷமா இருப்பேன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.
நா விளையாட போயிட்டு கொஞ்சம் லேட் ஆனாலும் பதறி போய் ஓடி வருவாங்க, இப்ப யாரும் இல்லாத அனாதையா இருக்கேனே…
ஏன் நம்மள கொல்ல நினைக்கிறாங்க?
நாம என்ன தப்பு பண்ணோம்….
நம்ம மதம் வேற, அவங்க மதம் வேறயாம்.
அது யாரோட தப்பு…?புரியல.
இந்த பூமில நாம இருக்க கூடாதுன்னு அவங்க முடிவு பண்ணிட்டாங்களாம்….
அவங்க யாரு இத முடிவு பண்ண?
ஏன்னா அவங்க கிட்ட நிறைய ஆள்பலம், பணபலம் இருக்காம்.
சரி நம்மள அழிச்சு என்ன பண்ண போறாங்க
நம்ம இனத்த கூண்டோட ஒழிச்சுட்டா அவங்க ஆட்கள் மட்டுமே இருப்பாங்க….
அதனால என்ன லாபம்
அவங்க ஆட்கள் மட்டுமே இருந்தா, அவங்க மதம் மட்டுமே நிலைக்கும்…
அவங்க மதம்னா என்ன?
அவங்க மதத்துல என்ன சொல்றாங்க.
அவங்க பல காலமாக பின்பற்றி வருவதே அவங்க மதம்.
அவங்க மதம்
இந்த உலகத்துல அன்பும் சகோதரத்துவம் முக்கியம் னு சொல்லுதாம்
அப்ப நம்ம மதம் என்ன சொல்லுதாம்
அன்பா இருக்கறதால மட்டுமே இந்த உலகத்த வெல்ல முடியும்னு
அப்ப அவங்க மதமும், நம்ம மதமும் ஒண்ண தானே சொல்லுது…
அப்புறம் எதுக்கு இந்த பாகுபாடு
சண்டை
யுத்தம் குண்டு வெடிப்பு புரியல…..
இப்ப என்ன தான் பிரச்சனை
உண்மைதான்
அன்பு தான் எல்லா மதத்துலயும் பொது.
ஆனா அத அவங்க சொல்லணுமாம் நாம சொல்லக்கூடாதாம்?
ஏன்?அவங்க மதப்படி அப்ப அன்பு பெரிசு இல்லையா?
இல்ல
அவங்க தான் பெரிசு…
அவங்க சொல்ல வர அன்பு தான் பெரிசு.
இங்க சொல்ல வர விஷயம் முக்கியமல்ல
யாரு சொன்னா
யாரு முதல்ல சொன்னா இதுதான் முக்கியம்….
இப்ப நம்ம மதத்தை சேர்ந்தவங்கள கொண்ணு குவிச்சுட்டு என்ன பண்ண போறாங்களாம்?
அவங்க இடத்துல பிராத்தனை கூட்டம் நடத்தி
அன்பு தான் எல்லாம் னு சொல்ல போறாங்களாம்..
ஒண்ணுமே புரியல என
அனாதையாக அந்த குழந்தைகள்
மாறி மாறி பார்த்து கொண்டன.
நமக்கும் இன்று வரை புரியல.
எல்லா மதமும் சொல்ல வருவது அன்பு மட்டுமே என்றால்
யுத்தம் எதற்கு?
அன்பு முக்கியமல்ல
அத யாரு சொல்றாங்கங்கிறதே முக்கியம்.
அதற்கு பெயர்
மதம்.
வலியுடன்
Dr Balasandhya SL kumaaran