கட்டுப்பாடுகளை களைவதற்கான சரியான தருணம் | Right time to overcome our limitations

என்னுடைய சிறு வயது முதலே எனக்கு தலையில் தண்ணீர் ஊற்றும் போது ஒரு விதமாக மூச்சுவிடுதலில் அசெளக்கரியம் கூடவே பயமும் இருக்கும். அது போல எல்லா புது விஷயங்களை கற்க ஆரம்பிக்கும் போது ஒருவித கலக்கம் மற்றும் வயிறு பிசைக்கிற மாதிரி இருக்கும். இது வயிற்றில் பட்டாம்பூச்சி அடிப்பது போல் அல்ல, பயம் தான்.
இது சிறு வயதில் தெரு நாய்களை கண்டு பயப்படுதல் ஆரம்பித்து தேர்வுக்கு முந்தைய நாள் இரவு மற்றும் காலை நடக்கும் அலப்பறைகளை நினைத்தால் இன்றைக்கும் விழி பிதுங்குகிறது.என்னுடைய மைண்ட் வாய்ஸ், என்னை பெற்ற தாயின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. ஏனென்றால், அவர்கள் தேர்வு நேரத்தில் காலை எழுப்பி எங்களுக்கு தேவையானவற்றையும் செய்து, அவர்களுக்கும் வேலை சென்று, அய்யோ இங்கு பெண்களின் நிலை பரிதாபத்தற்குரியது. தற்போது அடுத்த தலைமுறை யினரிடம், பெண்களுக்கான அந்த நிலை மெல்ல மாறி கொண்டு வருகிறது என்று நம்புகிறேன்.
இப்போது, மெயின் கதைக்கு வருவோம். ஆக, மெல்ல நீச்சல் கற்கும் போதும் என்னை சுற்றி இருப்பவர்களை பாடாய்படுத்தி எடுப்பேன்.
தம்மம்பட்டி என்ற ஊரில் எங்களுடைய மாமாவின் நிலத்துக்கு அருகில் உள்ள கல் குவாரியில் நீச்சல் கற்க, பெரும் படை சூழ , காய்ந்த சுரைக்குடுக்காய் ( for safety, like tube in swimming pool) கட்டி கொண்டு கிளம்பினேன். அங்கு மேலே இருந்து எட்டி குதிக்க பயந்து கொண்டு பின்வாங்கினால், பின்னாடி மாமா நிற்பார், கீழே என்னை தூக்கிவிட ஒருவர் இருப்பார். இருந்தாலும் முன்னாடி பின்னாடி என்று குதிக்காமல் விளையாடி கொண்டு இருந்தேன். மாமா எட்டி ஒரு உதை – இப்படி தான் நீச்சல் பழக ஆரம்பித்தேன்.
இப்படியே போய் கொண்டு இருக்க, டூவீலர் கியர் வண்டி கற்கும் போதும் ஒரு சுணக்கம், எங்கள் வீட்டில் வண்டி இல்லை. வீட்டில் அண்ணா வண்டி வாங்கிய பின் தான் கல்லூரி மூன்றாம் ஆண்டுக்கு பிறகு தான் கற்றேன்.
இப்படி எல்லாத்துக்கும் பயந்து கொண்டு இருக்கும் நான், ஒரு நாள் எனக்கு திருமணம் நடக்கிறது (என்னை சுற்றி இருப்பவர்களை தாண்டி எனக்கே பெரிய ஆச்சரியம் தான்). மனைவியுடன் அந்தமான் பயணம் மேற்கொள்கிறேன்.
அங்கு scuba divingல் கடலில் மூழ்கி சுற்றி பார்த்தல் (எல்லா வகையான பாதுகாப்பு உபகரணங்களின் உதவியோடு தான், இருந்தாலும் என்னை பற்றி முன்பே எவ்வளவு பில்டப் கொடுத்து உள்ளேன் என்பது எல்லோருக்கும் தெரியும்).
நல்ல வேளை scuba diving பற்றி யாரிடமும் விசாரிக்கவில்லை, கல்யாண ஆன புதிது, ஆர்வத்தில் முந்தைய நாள் இரவு புக் செய்து விட்டு, அதிகாலை எல்லாம் எழுந்து கிளம்பி நானும் எனது மனைவியும் அந்த இடத்துக்கு சென்றால்,அங்க ஒரு விதமான மெல்லிய ஆடை கொடுத்து, அதை எப்படி போடுவது என்று தெரியவில்லை. பேண்ட் சட்டையும் ஒன்னா வச்சி தைத்த பனியன் துணி மாதிரி இருக்கிறது. எப்படியோ அணிந்து கொண்டு உள்ளே போனால் அங்கு தான் பயமுறுத்தும் அறை இருந்தது. அங்கு ஒரு பார்ம் (sheet) கொடுத்து நிரப்ப சொல்லுவார்கள். அங்கு தான் பீதி கிளம்ப ஆரம்பித்தது.
அந்த sheet ஐ நிரப்பி முடிப்பதற்குள் நமக்கு வியர்த்துவிடும், ஏனென்றால் நம்ம ஜாலியா இருக்குமுனு பார்த்தால்… எடுத்துக்காட்டாக ஒரு கேள்வி: “இந்த பயிற்சி முடித்த பின் நீங்கள் ஒரு நாளை வரை வானூர்தியில் பறக்க கூடாது”, etc..
பயம் கூடி விட்டது, வெளியில் காட்டி கொள்ள முடியவில்லை, ஏனென்றால், பக்கத்தில் மனைவி அமர்ந்து உள்ளார். பின்பு, ஒரு நம்பிக்கையில் கிளம்பிவிட்டேன், பாபா படத்தில் வரும் பாடலில் வருவது போல், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று கிளம்பிவிட்டேன்.
கற்று கொடுத்து உள்ளே கூட்டி கொண்டு போகிறவருடன் மனைவியோடு சேர்ந்து ஒரு selfie எடுத்து கொண்டு உள்ளே சென்று விட்டேன். அவர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன் (அங்கே பெரும்பாலனவர்கள் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள்). அவர் தொடர்ச்சியாக இரும்பி கொண்டே இருக்கிறார், ஆனால் தண்ணீரில் மூழ்கும் போது என்ன அசைவுகள் செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்து, பின்னாடி சிலிண்டர் வாயில் பைப், பைப்பை பல் இடுக்கில் அழுத்தி பிடித்து வாய் வழி மட்டுமே சுவாசம் செய்ய வேண்டும், மூக்கு முழுவதுமாக அடைக்க பட்டு இருக்கும்.
நமது சார், தற்சார்பு பயிற்சியல் வயிறு சுவாசம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியிருப்பார்கள். ஆனால், எப்போதும் மற்றவர்களை கட்டுப்படுத்தும் குணம் இருப்பவர்களுக்கு வயிற்று சுவாசம் வராது, அய்யோ அய்யோ என்று மனம் அடித்து கொள்கிறது. கடலுக்கு அடியில் 12 அடி வரை சென்று 20 நிமிடங்கள் வரை
உள்ளே இருந்து கடலின் பேரழகை கண்டு களிக்கலாம். எனக்கு பின்னாடி பயிற்றுனர் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தி, எனக்கு முன்பு ஒருவர் என்னை பல வித போஸ்களை கொடுக்க செய்து, புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து தள்ளுவார்.
மூழ்கி உள்ளே செல்லும் முன், நமது சார் சொல்லுவது தான் ஞாபகம் வந்தது. வெகு எளிமையாக சென்று உற்சாகமாக கண்டு களித்து வர வேண்டிய நிகழ்வு.
நம்முடைய அடக்கும் குணம் காரணமாக போராட்டமாக மாறி , பின்பு மனதில் ஒரு வித புரிதல் ஏற்பட்டு ஒப்படைத்தல் தன்மை வரும் போது, இயற்கை சுற்றி இருப்பவர்களின் உதவியோடு & அவர்களின் வழிகாட்டுதலோடு நல்லபடியாக கடலில் இருந்து வெளியே வந்தேன்.
வெளியில் வரும் வரை எதுவும் தெரியவில்லை, கொஞ்சம் நேரம் கழித்து பல்லு தானாகவே அடிக்க ஆரம்பித்துவிட்டது. எனக்கு உறுதுணையாக இருந்த மனைவி டீ வாங்கி கொடுத்தவுடன், கதையின் கிளைமேக்ஸ் பகுதிக்கு வந்துவிட்டோம்.
ஆக, கதையின் கரு என்னவென்றால், நாம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் எந்த ஒரு புதுமையான முயற்சிகளை செய்து பார்த்தோமானால்,அந்த நிகழ்வு நமது வாழ்வின் பசுமையான நினைவாக மாறிவிடும்.
இத்தகைய வாய்ப்பையும் கூடவே வாழ்வின் புரிதலையும் கற்று கொடுக்கும் எங்களுடைய ஆசிரியர் பால்பாண்டியன் ஐயாவிற்கும், அக குரு பாரம்பரியத்திற்கும், இந்த தேனிலவு பயணத்தை அன்பளிப்பாக அளித்த எர்த் இந்தியா நிறுவனத்தின் அங்கத்தினர் அனைவருக்கும், குறிப்பாக எங்களுடைய தலைமை இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கும் நன்றிகள் பல.
Nice to hear the experience Ram,
Happiness never ends as long as we are with our loved ones.
Keep Rocking